பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்வு - மத்திய அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மேலும் 2 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு இன்று நள்ளிரவு முதலே நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் அப்படியே இருக்கும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது கடுமையாக சரிந்துள்ளது. ஒரு பீப்பாய் 59 புள்ளி 16 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது வாகன உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day