பெண்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டம் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தினை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

பெண்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆந்திரப் பிரதேச அரசு, குறிப்பாக பெண்களுக்கு "வீட்டிலிருந்து வேலை" கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த புதிய முயற்சியை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் ஐ.டி. அலுவலகங்களை அமைக்கவும், கிராமப்புரங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஐ.டி. நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

varient
Night
Day