பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை : வலுக்கும் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 9ம் தேதி இரவு பணியில் இருந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனையில் செய்யப்பட்டதில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவுப் பணியிலுள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும், கொல்கத்தாவிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளிலுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் உள்ள பத்து அரசு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடங்கியுள்ளனர். இந்த குற்றச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி முழுக்கம் எழுப்பினர்.

varient
Night
Day