பொங்கல் திருநாள் - தலைவர்கள் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், , உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து நாட்டுமக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இப்பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும் என்றும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அதிக தீவிரத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் விழாவில் கலந்த கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துவதாகவும் பிரதமர் மோடி எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், செழிப்பையும், பெரும்வளத்தையும், முன்னேற்றத்தையும் சாத்தியப்படுத்துவது கூட்டுழைப்பும் ஒற்றுமையுமே என்று அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நமக்கு உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இவ்வேளையில் சந்தோசமான, ஒளிமயமான சமத்துவ எதிர்காலத்தை அடைவதற்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம் என்றும் தம்  தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day