பொது சிவில் சட்டம் - உத்தரகண்ட் அமைச்சரவை ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி,  இதை சட்டமாக்குவதற்கான நடவடிக்கையை  மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். இதனிடையே உத்தரகண்ட், சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நாளை பொது சிவில் சட்ட வரைவு மசோதா அவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட உள்ளது. தொடர்ந்து உரிய நடைமுறைகளுக்கு பிறகு சட்டமாகும் நிலையில் இந்த சட்டத்தை அமல்படுத்தப்படும் நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகண்ட் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day