பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்ற பொது சிவில் சட்டம் வழியமைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், 740 பக்கங்களை கொண்ட இறுதி வரைவு மசோதவை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day