பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியவா்களுக்கு விருதுகள் வழங்கினார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

17வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியவா்களுக்கான பிரதமரின் 16 விருதுகளை பிரதமா் நரேந்திர மோடி வழங்கி கவுரவித்தார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருதுகளை வழங்கி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமா் மோடி உரையாற்றினார். நாடு முழுவதிலும் உள்ள குடிமைப் பணி அதிகாரிகள், குடிமக்களுக்காக தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும், பொதுச் சேவையில் அா்ப்பணிப்புடன் சிறப்பாக செயலாற்ற பிரதமா் எப்போதும் தங்களை ஊக்குவித்து வருவதாகவும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day