பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினராக ED முன்னாள் இயக்‍குநர் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழு நேர உறுப்பினராக, அமலாக்கத் துறை முன்னாள் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா, நியமிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் பொருளாதார ஆலோசனைகளை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வழங்கி வருகிறது. இதன் முழு நேர உறுப்பினராக இருந்த முன்னாள் தலைவர் பிபேக் ஓபராய், கடந்த ஆண்டு நவம்பரில் காலமானார். இதையடுத்து, அந்த பதவிக்கு அமலாக்கத் துறையின் இயக்குநராக பணியாற்றிய சஞ்சய் குமார் மிஸ்ரா நேற்று நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பொருளாதார வல்லுநர்கள், ரிசர்வ் வங்கி, உலக வங்கி வல்லுநர்கள் வகித்த பதவிக்‍கு அமலாக்‍கத்துறை அதிகாரியை நியமித்தது ஏன் என காங்கிரசின் பிரவீன் சக்‍கரவர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

Night
Day