போதையில் மணப்பெண்ணுக்கு பதிலாக தோழிக்கு மாலை அணிவித்த மணமகன் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த மணமகன், மணமகளுக்கு பதிலாக தோழிக்கு மாலை அணிவித்ததால் கைது செய்யப்பட்டார். 


பகவந்த்பூர் பகுதியில் நடந்த திருமணத்தில் மணமகள் ராதா அமர்ந்திருக்க, மணமகன் ரவீந்திரகுமார் மதுபோதையில் தள்ளாடியபடி மணமேடைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மணப்பெண்ணுக்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணப்பெண் தோழிக்கு மாலை அணிவித்துள்ளார். இதனால் இரு குடும்பத்திற்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கி கொண்டனர். பின்னர் போலீசார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இதையடுத்து மணமகள் கொடுத்த புகாரின் பேரில் மணமகனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வரதட்சணை துன்புறுத்தல், பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Night
Day