போரின்போது தேசத்துக்‍காக தனது தங்கத்தை கொடுத்தவர் இந்திரா காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டுக்‍காக மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் தனது அம்மா என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்புகள் நசுக்கப்படுவதாக தெரிவித்தார். கடந்த சில நாட்களாக உங்கள் வசம் உள்ள தங்கம் மற்றும் மாங்கல்யத்தை காங்கிரஸ் கட்சி பறிக்கும் என சொல்லப்படுவதாக கூறினார். போரின் போது தேசத்துக்காக தனது தங்கத்தை கொடுத்தவர் இந்திரா காந்தி. மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் எனது அம்மா என்று கூறினார். பெண்களின் போராட்டத்தை பாஜகவினரால் புரிந்து கொள்ள முடியாது. அது புரிந்திருந்தால் பிரதமர் மோடி அப்படி பேசியிருக்க மாட்டார் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Night
Day