போர் விமான விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப்பிரதேச மாநிலத்தில் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 


மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் பாப்ரேடு-பைன்சா எனும் கிராமத்தின் அருகே இன்று பிற்பகல் 2 பேர் பயணிக்கக்கூடிய மிராஜ் 2000 போர் விமானம் வழக்கமான பயிற்சில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக போர் விமானம் அங்கிருந்த வயல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அப்போது போர் விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து குதித்து காயங்களுடன் உயிர்தப்பினர்.  விபத்துக்கான காரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Night
Day