மகளிர் உதவித் தொகை திட்டங்களுக்கான பதிவு நாளை துவக்கம் - அரவிந்த் கெஜ்ரிவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் மகளிர் உதவித் தொகை மற்றும் முதியோர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை ஆகிய திட்டங்களுக்கான பதிவு நாளை துவங்கவிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பேட்டியளித்த அவர், மகளிரின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 2 ஆயிரத்து 100 ரூபாய் டெபாசிட் செய்யும் மஹிலா சம்மான் யோஜா திட்டத்திற்கான பதிவு நாளை துவங்கும் என்று கூறினார். மேலும் தங்களுடைய இரண்டாவது அறிவிப்பான 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் சஞ்சீவினி யோஜனா திட்டத்திற்கான பதிவும் நாளை துவங்க இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். இந்த இரண்டு திட்டங்களுக்கும் வாக்காளர் அடையாளர் அட்டை அவசியம் என்றும் அவர் கூறினார்.

Night
Day