மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சிக்கு வர உத்தரவாதம் இல்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சர்ச்சை பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்காவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வரும் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி தீவிரமாக களம் இறங்கியுள்ளது. 
இந்நிலையில்,  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தலைமையிலான அரசாங்கம் 4வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும் என எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை என தெரிவித்தார். பின்னர் சுதாரித்து கொண்ட நிதின் கட்கரி, நகைச்சுவைக்காக தான் பேசியதாக தெரிவித்தார். இருந்தாலும் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day