எழுத்தின் அளவு: அ+ அ- அ
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில 2வது கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாதியில் காங்கிரஸ் 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரே சிவசேனா 95, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களில் களம் காண்கின்றன. 237 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதி கூட்டணி 200 இடங்களிலும் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தனித்து 125 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.