மகாராஷ்டிரா : ரசாயன ஆலை வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

தானேவில் உள்ள டோம்பிவிலி கிழக்கில் உள்ள அமுதன் கெமிக்கல் என்ற பெயரில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு, நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. அதில், 7 பேர் உயிரிழந்த நிலையில் இன்று காலை மேலும் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 40க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த, பாய்லர் வெடித்து சிதறியதன் சத்தம்  2 கிலோ மீட்டர் சுற்றளவு தூரம் வரை கேட்டுள்ளது. பாய்லர் வெடித்த அதிர்வில் ரசாயன தொழிற்சாலையின் அருகே உள்ள வீடுகளில் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளது. அதன், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

Night
Day