இந்தியா
2 நாள் பயணமாக தனி விமானத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி...
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
வனப்பகுதியில் உள்ள நீர்நிலையில் இருந்து புலி ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலை கவ்விக் கொண்டு செல்லும் காணொலி வைரலாகி வருகிறது. பிரபல வனவிலங்கு புகைப்படக் கலைஞர் தீப் கதிர் பதிவு செய்த அந்த காட்சியில், புலி ஒன்று அங்கிருந்த குளத்தில் மிதந்த நெகிழி பாட்டிலை லாவகமாக வாயில் கவ்விக் கொண்டு கம்பீரமாக நடந்து செல்கிறது. இந்த காணொலியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படக் கலைஞர் தீப் கதிர், காடுகளை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்போம் என்றும், அதற்கான ஒரு சைகைதான் புலியின் செயல் எனவும் பதிவிட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக உள்ள இந்த காணொலி, இன்ஸ்டாகிராமில் 21 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தனது சிகி...