மகா கும்பமேளாவில் பிப். 1-ஆம் தேதி 73 நாடுகளின் தூதா்கள் புனித நீராடவுள்ளனா்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் வரும் 1-ம் தேதி அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள் புனித நீராடவுள்ளனா்.

 பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இங்கு இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து தினமும் புனித நீராடி வருகின்றனா். இந்நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன், ஜப்பான், ஜொ்மனி, நெதா்லாந்து,  கனடா, ஸ்விட்சா்லாந்து, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள் வரும் 1-ம் தேதி பிரயாக்ராஜுக்கு வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளனர். இது தொடர்பாக உத்தரபிரதேச தலைமைச் செயலருக்கு வெளியுறவுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.


Night
Day