மக்களவையில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நீட் சர்ச்சை, அக்னிபாத் திட்டம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளும் பாஜகவை குற்றம்சாட்டி அனல்பறக்க உரையாற்றினார். அவருடைய குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ராகுல் காந்தி பேசியவற்றில் 11 பகுதிகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 

தற்போது நடைபெற்றுவரும் 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மீது எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி நேற்று உரையாற்றினார். 2 மணி நேரம் அவர் ஆற்றிய உரையில், பாஜக-வை கடுமையாக விமர்சித்தார். இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை வெறுப்பு குறித்து மட்டுமே பேசுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

இதற்கு அவையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் நீட் முறைகேடு, மணிப்பூர் கலவரம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் ராகுல் காந்தி பேசினார். இந்துக்கள் தொடர்பான அவருடைய பேச்சு புயலை கிளப்பிய நிலையில், ராகுல் காந்தி இந்துக்களை அவமதிக்கவில்லை என்றும், பாஜக தலைவர்களையே அவர் விமர்சித்தாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 

ஆனால், ராகுலின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து தமது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தியின் உரை இந்துக்கள் மீதான இந்தியா கூட்டணியினரின் வெறுப்பை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

சகோதாரத்துவத்தைப் பற்றி பேசும் ராகுல் காந்தி இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கம் குற்றச்சாட்டியுள்ளார். ராகுல் காந்தி ஒட்டு மொத்த இந்துக்கக்ளையுளம் அவமதித்துவிட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பொய் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசியுள்ள ராகுல் காந்தி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார். 

ராகுல் காந்தி ஒட்டுமொத்த இந்துக்களையும் அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இதன் மூலம் இந்துக்களை மட்டுமின்றி, பாரத தாயின் ஆன்மாவையும் அவர் காயப்படுத்தியிருப்பதாக விமர்சித்துள்ளார். 

இதனிடையே, இந்துக்கள், ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடி பற்றி ராகுல் காந்தி பேசியவற்றில் 11 பகுதிகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 

Night
Day