மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையை வெல்ல முடிந்ததாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு மக்களவையில் இன்று பிரதமர் பதிலளித்துப் பேசினார். அப்போது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக நாட்டில் எதிரொலித்த காங்கிரஸ் கட்சியின் வறுமையை விரட்டுவோம் என்ற  முழக்கம் தோல்வியடைந்ததாகக் கூறினார். அதற்கு பதிலாக, பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்ததாக குறிப்பிட்டார்.

ஏழைகளுக்காக நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டதாகவும், பெண்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டதாகவும் கூறினார். மத்திய பாஜக அரசு ஏழைகளுக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளதை குடியரசுத் தலைவர் தனது உரையில் விரிவாகக் கூறியதாகவும் குறிப்பிட்டார். ஆனால் குடிசைகளுக்குச் சென்று  புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏழை மக்களைப் பற்றிய விவாதம் சலிப்பையே ஏற்படுத்தும் என ராகுல் காந்தியை மறைமுகமாகச் சாடினார்.

சில அரசியல் தலைவர்கள் மஹால் கட்டி ஆடம்பரமான ஷவர்களில் குளிப்பதாக, அரவிந்த் கெஜ்ரிவாலை சாடிய பிரதமர் மோடி, தனது அரசின் கவனம் ஒவ்வொரு ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் இணைப்புகளைத் தருவதில் உள்ளதாக கூறினார். மேலும் தனது அரசாங்கம் 12 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் வழங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Night
Day