எழுத்தின் அளவு: அ+ அ- அ
மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 5-வது கட்டப் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், கட்சியில் புதிதாக இணைந்தவர்கள், முன்னாள் நீதிபதி, நடிகை என பலரும் இடம் பெற்றுள்ளனர்.
பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் பெயர்களை இதுவரை நான்கு பட்டியல்களாக அக்கட்சி வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று ஐந்தாவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
இதில் ஆந்திரா, பீகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கான 111 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இமாச்சல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரிலும், மீரட் தொகுதியில் மகாபாரதம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவிலும் பாஜக சார்பில் களம் காண்கின்றனர். விருப்ப ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்கத்தின் தம்லுக்கில் போட்டியிடுகிறார்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பெகுசராய் தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாட்னா சாஹிப் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா தொகுதியில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் போட்டியிடுகிறார்.