மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ-வை வைத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலுக்கு முன் அரசியல் செய்ய மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம்  பிரச்சனையை கொண்டு வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக-வினர் வாக்குகளுக்காக சிஏஏவை கையில் எடுத்துள்ளதாகவும் மம்தா சாடியுள்ளார். இந்த மசோதாவை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 
இதுகுறித்து மேற்குவங்க மாநிலம் கூச் பெஹாரில் பேசிய மம்தா பானர்ஜி, வரும் மக்களவைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவோம் என்று பா.ஜ.க. மக்களை மிரட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

Night
Day