மக்களவை தேர்தல் - இதுவரை ரூ.1,100 கோடி பணம், நகை பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலை முன்னிட்டு இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ஆயிரத்து 100 கோடி ரூபாய் பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த மார்ச் 16ம் தேதி மக்களவை தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து நாடு முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வாகன சோதனையில் இதுவரை 1,100 கோடி ரூபாய் பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

டெல்லி மற்றும் கர்நாடகா அதிகம் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடமும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இது, கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒப்பிடுகையில் 128 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day