மக்களவை தேர்தல் : ஏப்.19 தொடங்கி ஜூன் 1 வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன வசதி, மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்‍கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நாடு முழுவதும் 543 மக்‍களவைத் தொகுதிகளிலும் வாக்‍குப்பதிவு 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 

முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்‍களவைத் தொகுதிகளில் முதற்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 

2ம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 மக்‍களவைத் தொகுதிகள் இடம்பெறுகின்றன.

மே மாதம் 7ம் தேதி நடைபெறும் 3-ம் கட்டத் தேர்தலில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 94 மக்‍களவைத் தொகுதிகள் இடம்பெறுகின்றன.

மே மாதம் 13ம் தேதி நடைபெறும் நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 96 மக்‍களவைத் தொகுதிகள் இடம்பெறுகின்றன. 

ஐந்தாம் கட்டமாக மே மாதம் 20ம் தேதி 8 மாநிலங்களைச் சேர்ந்த 49 மக்‍களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 

மே மாதம் 25ம் தேதி நடைபெறும் ஆறாம் கட்டத் தேர்தலில் 7 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகள் இடம்பெறுகின்றன. 

7வது மற்றும் இறுதி கட்டமாக ஜுன் முதல் தேதியன்று 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 மக்‍களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 

Night
Day