மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைந்து முடித்திடுக - சோனியா காந்தி வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 நாட்டில் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகள் பெற முடியாமல் தவிப்பதால், மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய அவர், தற்போது வரை, 2011-மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்  கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்தார். 14 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மக்களை தொகை கணக்கெடுப்பை விரைவாக முடித்து புதிய பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சோனியா காந்தி வலியுறுத்தினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்டமானது, கொரோனா காலத்தில் பல கோடி மக்களை பட்டினியிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டார்.

Night
Day