மக்‍களவை எதிர்க்‍கட்சி தலைவர் ராகுல்காந்தி ரேபரேலி, அமேதி தொகுதிகளில் 2 நாள் சுற்றுப்பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற மக்‍களவை எதிர்க்‍கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்.பியுமான ராகுல்காந்தி ரேபரேலி சென்று திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

டெல்லியில் இருந்து ரேபரேலி சென்றுள்ள ராகுல்காந்தி, இன்று ரேபரேலியிலும், நாளை அமேதி தொகுதியிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்‍களிடம் குறைகளை கேட்க உள்ளார். இந்த நிலையில் இன்று ரேபரேலியில் குண்டன்கஞ்ச் பகுதியில் விசாகா தொழிற்சாலை நிறுவனம் சார்பில் அமைக்‍கப்பட்ட சூரியமின்சக்‍தி திட்டப் பணியையும், மின்சார சார்ஜிங் மையத்தையும் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சுபாஷ் சந்திர போஸின் சிலையையும் திறந்து வைத்தார்.

இதையடுத்து அமேதி தொகுதியில் முன்ஷிகஞ்சில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை அரங்கை திறந்து வைக்‍க உள்ளார். கோர்வாவில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலையை பார்வையிட உள்ளார். முன்னதாக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் ராகுல்காந்தி சந்திக்‍க உள்ளார். 

Night
Day