மணமேடைக்கு பின்னால் மணமகன் செய்த காரியத்தால் பாதியில் நின்ற திருமணம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேசத்தில் திருமணத்தின்போது மணமகன், மண மேடைக்கு பின்னால் அமர்ந்து கஞ்சா புகைத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. ஃபட்டுபூர் பகுதியை சேர்ந்த பிங்கி என்பவருக்கும், ஜெயராம்பூரை சேர்ந்த கவுதம் என்ற இளைஞருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், திருமண ஊர்வலத்தின்போது, கவுதம் குடிபோதையில் இருந்ததாகவும், மணமேடைக்கு பின்னால் அமர்ந்து கஞ்சா புகைத்து கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிங்கியின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். மேலும், கவுதமனின் பெற்றோரிடம், திருமணத்திற்கு செலவழித்த 8 லட்ச ரூபாயை திருப்பி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

varient
Night
Day