மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட பிரதமர் மோடி உழைக்க வேண்டும்' - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

'மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட பிரதமர் மோடி உழைக்க வேண்டும்' என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் மாவட்டத்தில் குக்கி ஆயுதக்குழுவால் கடத்திச் செல்லப்பட்டு 6 போ் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், மணிப்பூரில் சமீபத்திய வன்முறை மற்றும் ரத்தம் சிந்தும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, 'வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தை பார்வையிட்டு, அங்கு அமைதியை மீட்டெடுப்பதற்கு பிரதமர் மோடி உழைக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

Night
Day