எழுத்தின் அளவு: அ+ அ- அ
மணிப்பூர் மாநிலத்தில் தலைமை காவலருக்கு ஆதரவான போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி - மெய்தி சமூகங்களுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. குக்கி மற்றும் மெய்தி சமூகங்களில் உள்ள ஆயுதக்குழுக்கள் தொடர்ந்து தாக்குதல், வன்முறை சம்பவங்களை நடத்தி வருகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 6 மாதங்களாகவே பதற்றமான சூழல் உள்ளது. இந்நிலையில், மணிப்பூரின் சுராசந்த்பூரை சேர்ந்த தலைமை காவலர் சியாம் லால் என்பவர் ஆயுதமேந்திய போராளிகளுடன் செல்ஃபி எடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், சியாம் லால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு ஆதரவாக பொதுமக்கள் சிலர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. இதில், 2 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தெரிகிறது.