மணிப்பூரில் தொடரும் கலவரத்தால் பதற்றமான சூழல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி ஆயுதக்குழுவால் கடத்திச் செல்லப்பட்டு 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், அமைச்சர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. கொலை செய்யப்பட்டவா்களுக்கு நீதி கேட்டு, மணிப்பூரின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் நேற்று  போராட்டம் வெடித்தது. இம்பாலில் 3 அமைச்சா்கள் மற்றும் 6 பாஜக எம்எல்ஏ-க்களின் வீடுகளை போராட்டக்காரா்கள் சூறையாடினர். அங்கு நிவாரண முகாமில் இருந்த மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் காணாமல் போனதையடுத்து, அவா்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக மைதேயி அமைப்புகள் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது

Night
Day