மணிப்பூரில் பற்றி எரியும் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மணிப்பூரில் மீண்டும் பற்றி எரியும் வன்முறை சம்பவங்கள், பதற்றம் குறித்து உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

மணிப்பூரில் உள்ள குக்கி மற்றும் மெய்தெய் இன மக்களிடையே பிரச்னை நீடித்து வருகிறது.  இந்நிலையில், அண்மையில் ஜிரிபம் மாவட்டத்தில் மெய்தெய் இனத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 6 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ எட்டியுள்ளது. இதனால், அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. முதலமைச்சர், உட்பட 13 எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இதனால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதுடன்,  வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூர் அரசு போராடி வருகிறது. இதனிடையே, மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாக கூறி, ஆளும் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. பைரன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, 7 எம்எல்ஏக்கள் கொண்ட கன்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி திரும்பப் பெற்றுள்ளது. மொத்தம் 60 எம்எல்ஏக்‍களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் பாஜக கூட்டணிக்கு 43 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சைகள் ஆதரவு இருப்பதால், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. வன்முறையை கட்டுப்படுத்த உயர்அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிற்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். 



varient
Night
Day