மணிப்பூர் எரிக்கப்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது - மல்லிகார்ஜுன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக வேண்டுமென்றே மணிப்பூர் எரிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  2023 மே முதல், நினைத்துப் பார்க்க முடியாத வலி, பிளவு மற்றும்  வன்முறை ஆகியவை மணிப்பூர் மக்களின் எதிர்காலத்தை அழித்து விட்டதாக கூறியுள்ளார். பிரதமர் மோடி தங்களை காப்பாற்றவில்லை என்பதையும், தங்கள் துயரங்களைக் களைய மாநிலத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை என்பதையும் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இரட்டை என்ஜின் ஆட்சியில் மணிப்பூரும் பாதுகாப்பானது அல்ல என கார்கே பதிவிட்டுள்ளார்.

Night
Day