மணிப்பூர் தலைமை நீதிபதி D.கிருஷ்ணகுமார் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மணிப்பூர் மாநில தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

மணிப்பூர் மாநில தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுல் பதவி காலம்  நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ள டி.கிருஷ்ணகுமார் மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியது. இந்நிலையில் மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அவரை நியமனம் செய்யும் அரசாணையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  21 மே 2025 அன்று தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஓய்வு பெறவுள்ளார். 

Night
Day