மணிப்பூர் : சர்ச்சைக்குரிய உத்தரவை ரத்து செய்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மெய்தெய் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிசீலனை செய்யும்படி முன்னர் பிறப்பித்த உத்தரவை மணிப்பூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில், மெய்தெய் சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதை 4 வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து தொடங்கிய கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட, இன்று வரை மணிப்பூர் மாநிலம் அமைதி இழந்து தவித்து வருகிறது. இந்தநிலையில் முந்தைய உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம்,  .  பழங்குடியினர் பட்டியலை நீதிமன்றங்கள் மாற்றவோ, திருத்தவோ முடியாது, மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு  என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உள்ளதால், பழைய தீர்ப்பின் சர்ச்சைக்குரிய பத்தியை நீக்கி உத்தரவிட்டது. 

Night
Day