மண்சரிவு குறித்து வல்லுநர்கள் எச்சரித்தும் கேரள அரசு அஜாக்கிரதை : மாதவ் காட்கில் குழு குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மண்சரிவு குறித்து வல்லுநர்கள் எச்சரித்தும் கேரள அரசு அஜாக்கிரதையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மண் அரிப்பிற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் ஒற்றை பயிர் சாகுபடியை கைவிட வேண்டும் என மாதவ் காட்கில் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அகழ்விடங்கள், சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களை மேற்குத்தொடர்ச்சி மலைக்குள் அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வன உரிமைச் சட்டத்தை மேற்கு மலைத்தொடர் முழுவதும் முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் மாதவ் காட்கில் குழு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Night
Day