மதத்தின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்க காங்கிரஸ் திட்டம் - பிரதமர் மோடி பகிரங்க புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதத்தின் அடிப்படையில் நிதி நிலை அறிக்கை தயாரிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பிம்பால்கான் பஸ்வந்த் பகுதியில் நடைபெற்ற பிரசார பேரணியில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது பட்ஜெட்டில், இஸ்லாமியர்களுக்கு 15 சதவீதம் நிதி ஒதுக்க மன்மோகன் சிங் விரும்பியதாகவும், பாஜகவின் கடும் எதிர்ப்பால் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மதத்தின் அடிப்படையில் நிதி நிலை அறிக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். ஆகவே, இந்து பட்ஜெட் - முஸ்லீம்  பட்ஜெட் என நிதி நிலை அறிக்கையை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்றும், மத அடிப்படையிலான ஒதுக்கீட்டையும் அனுமதிக்க மாட்டேன் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 

Night
Day