மதுபான கொள்கை முறைகேடு வழக்கு - கவிதா ரூ.100 கோடி வழங்கியதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மதுபான கொள்கை ஊழலில் கைது செய்யப்பட்ட கவிதா, ஆம் ஆத்மி தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் வழங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அதற்கு முன் ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் சோதனையிட்ட அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள், பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மியின் தலைவர்கள் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்பட முக்கிய தலைவர்களுடன் கவிதா சதிதிட்டம் தீட்டியதாகவும், 100 கோடி ரூபாய் வரை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது. 

Night
Day