இந்தியா
மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா ஹேமந்த் சோரன் அரசு
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தே?...
வறட்சி நிவாரணம் கோருவதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே போட்டிகள் இருக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரண நிதியை, மத்திய அரசு வழங்கவில்லை எனக் கூறி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா , சட்டப்பிரிவு 32ன் கீழ் மனு தாக்கல் செய்வதற்கு பதிலாக மத்திய அரசுடன் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என வாதிட்டார். அப்போது, மத்திய அரசின் பலன்களுக்காக பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுக தொடங்கியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே போட்டி இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள், 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தே?...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்?...