மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய பாஜக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்வைத்து, மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினாா். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சா்கள் கூட்டத்தில் பிரதமா் மோடி, பங்கேற்று உரையாற்றினார். அப்போது, வளா்ந்த இந்தியா-2047 செயல்திட்டம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். மேலும், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். முன்னதாக பாஜக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்வைத்து, மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

Night
Day