மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என மூன்று கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடந்து, தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை இன்று வெளியிட்டது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்திற்கு சென்று சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

Night
Day