இந்தியா
கட்டண உயர்வு - ஜியோவிலிருந்து 11 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்...
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடுத்துள்ளார். தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறுவார் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை நீர்த்துப்போக செய்யும் விதமாக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பிரதமர், மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழு, தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. தற்போது தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து பிரசாந்து பூஷன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் முத்தாய்ப்பான தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...