மத்திய அரசின் நடவடிக்கையால் மாணவர்கள் பாதிப்பு - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

SC, ST, OBC மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை பாஜக அரசு குறைத்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.  


இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள கார்கே, கடந்த 10 ஆண்டுகளில் உதவித்தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவை எடுத்துக்காட்டி, மாநிலங்களவை பதில்கள் மற்றும் பட்ஜெட் ஆவணங்களில் இருந்து அரசாங்கத் தீர்வை மேற்கோள்காட்டியுள்ளார். அதன்படி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை ஆண்டுதோறும் 25 சதவீதம் குறைத்து வருவதாகவும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள், அடித்தட்டு மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

Night
Day