மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் வாட்ச் மற்றும் மோதிரம் அணியத் தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணியின்போது மோதிரம் மற்றும் வாட்ச் அணிய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் நோயாளிகள் இருக்கும் பகுதி, அவசர சிகிச்சை மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவைக்குப் பிந்தைய நோயாளிகளுக்கான தேறுதல் வார்டுகளிலும் ஊழியர்கள் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் நலன் கருதியும், தொற்றுநோய்களைத் தடுக்கும் வகையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

Night
Day