மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும்- பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்கள் உலகளாவிய தெற்கில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.

லாவோஸ் தலைநகர் வியன்டியானில் நடைபெற்று வரும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். அதில் உரையாற்றிய அவர்,  யூரேசியாவாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, அமைதியும், ஸ்திரத்தன்மையும் கூடிய விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றார். புத்தரின் தேசத்தில் இருந்து வந்துள்ள, தான், இது போரின் காலம் அல்ல என்று  பலமுறை கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பிரச்சனைகளுக்கு போர்க்களத்தில் இருந்து தீர்வு கிடைக்காது என்றும் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். மனிதாபிமான அணுகுமுறை, உரையாடல் மற்றும் இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் விஸ்வ பந்துவின் பொறுப்பை நிறைவேற்றுவதன் மூலம், இந்தியா இந்த திசையில் சாத்தியமான எல்லா வழிகளிலும் தொடர்ந்து பங்களிக்கும் என்றும் உறுதி அளித்தார்.

Night
Day