மத்திய பிரதேசம்: திருடர்களிடம் இருந்து பூண்டு விளைச்சலை காப்பாற்ற சிசிடிவி கேமரா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் விவசாயி ஒருவர் 25 லட்சம் செலவழித்து விளைந்த பூண்டை விற்று 1 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளார். ராகுல் தேஷ்முக் என்பவர் தமக்கு சொந்தமான 13 ஏக்கர் விவசாய நிலத்தில் 25 லட்ச ரூபாய் செலவிட்டு பூண்டு விவசாயம் செய்து வந்தார். பூண்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் அவர் அறுவடைக்கு தயாரான பூண்டுகளை விற்று சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார். சோலார் மின்சாரம் மூலம் நீர் பாய்ச்சி வரும் ராகுல் தேஷ்முக், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள 4 ஏக்கர் நிலத்தில் உள்ள பூண்டு விளைச்சலை காப்பாற்ற 3 இடங்களில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி உள்ளார்.

Night
Day