மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு பதில் கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, மத்திய அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது.

மத்திய குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுதியுள்ள இக்கடிதத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் 48க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தும் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளை கையாள்வதற்கு கூடுதல் விரைவு சிறப்பு நீதிமன்றங்களை மேற்குவங்க அரசு அமல்படுத்தாது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெண் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள நிலையில் அதனை அமல்படுத்தாதது ஏன் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி கேள்வி எழுப்பியுள்ளார்.

Night
Day