மரக்கிளைகள் அகற்றப்பட்டு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம், பெங்களூரில் பெய்த கனமழையால் பாதிக்‍கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயல்பு நிலைக்‍கு திரும்பியதாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரு நகரில் ஒயிட்பீல்ட் முதல் சல்லகட்டா வரை 37 ரயில் நிலையங்கள் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்‍கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக மெட்ரோ ரயில் பாதையில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் மெட்ரோ ரயில் போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது. பின்னர், மரக்‍கிளைகள் அகற்றப்பட்டு மீண்டும் மெட்ரோ சேவை இயல்பு நிலைக்‍கு திரும்பியதாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Night
Day