மராட்டியம் - ரூ.280 கோடி, ஜார்க்கண்ட் ரூ.158 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டசபை தேர்தலையொட்டி மஹாராஷ்டிராவில் 280 கோடி ரூபாய், ஜார்கண்டில் 158 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது. 

மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபைக்கான தேர்தலுடன், 14 மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, தேர்தல் அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து, தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் இதுவரை 558 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் பரிசு பொருட்கள், மதுபானம், போதை பொருட்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day