மராத்தா இடஒதுக்கீட்டுக்கு மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வரைவு மசோதாவுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று கூடிய மகராஷ்டிரா சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் நடைபெற்று மசோதா தாக்கலான நிலையில், அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. 2018-ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜி. கெய்க்வாட் தலைமையிலான ஆணையம் மராத்தா சமூகத்தின் பின்தங்கிய நிலை குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், மராத்தியர்களுக்கு இடஒதுக்கீட்டை அரசு நீட்டித்தது. ஆனால், அது அரசியலமைப்பு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 50 சதவீத வரம்பைத் தாண்டியதால், மாநில அரசு எடுத்த முடிவு உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. 

Night
Day