மராத்தா இட ஒதுக்கீடு - கோரிக்கைகள் ஏற்பு என ஏகநாத் ஷிண்டே அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா அரசு மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் உண்ணாவிரத போராட்டத்தை மனோஜ் ஜரங்கே பாட்டீல் விலக்கி கொண்டார். மராட்டியர்களுக்கு கும்பி என சான்றிதழ் வழங்கவேண்டும், ஆரம்ப கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜரங்கே பாட்டீல் வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஏராளமான மராத்தா சமூக பிரமுகர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படுவதாக மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை ஜரங்கே பாட்டீல் விலக்கிக்கொண்ட நிலையில், அவரும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் சத்ரபதி சிவாஜி மகாராஜா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Night
Day