மருத்துவ சங்கத்தினரின் எதிர்ப்புக்கு பணிந்த தமிழக அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மருத்துவ சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து முதுநிலை மருத்துவ படிப்புக்கான அரசாணை-151-ஐ நிறுத்தி வைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அதில் ஒன்பது பாடப் பிரிவுகளை தவிர மற்ற 15 பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதாக 151 அரசாணை மூலம் அரசு கடந்த ஒன்றாம் தேதி அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து முதுநிலை படிப்புக்கான அரசாணை 151 ஐ தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Night
Day